தாய்வான் விவகாரத்தில் கனடா தலையீடு செய்யக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்வான் விவகாரங்களில் கனடா தலையீடு செய்தால் பலவந்தமான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.
தாய்வான் ஒரே சீனா கொள்கைக்கு உட்பட்ட நாடு எனவும், சீனாவின் உள்விவகாரங்களில் யாரும் தலையீடு செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
தாய்வானுக்கு வெளிநாட்டு அரசியல்வாதிகள் நேரடியாக விஜயங்களை மேற்கொள்வதனை ஏற்க முடியாது என சீனா குறிப்பிட்டுள்ளது.தாய்வானுக்கு வெளிநாட்டு அரசியல்வாதிகள் நேரடியாக விஜயங்களை மேற்கொள்வதனை ஏற்க முடியாது என சீனா குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்த முனையும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என சீனா வலியுறுத்தியுள்ளது.