ஒன்றாரியோ மாகாணத்தில் ஸ்கை டைவிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் விமானத்திலிருந்து வீழ்ந்த போது உயிரிழந்துள்ளார்.
ஒன்றாரியோவின் தென் சிம்கோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டொரன்டோவில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் வடக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்கை டைவிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு ஆண்கள் அண்மையில் இதே பகுதியில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடரில் போலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.