Home இந்தியா தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச உயிரிழப்புகள் உத்தரப்பிரதேசத்தில்

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச உயிரிழப்புகள் உத்தரப்பிரதேசத்தில்

by Jey

பெரும்பாலான விபத்துகள் அதிவேகத்தால் நடந்தவை, மொத்த விபத்துகள் 59.7% ஆகும். 21,792 பேர் உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் சாலை விபத்துகளில் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ல் போக்குவரத்து விபத்துகளால் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் இதில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

உத்தரப்பிரதேசம் – 24,711 இறப்புகள் தமிழ்நாடு – 16,685 இறப்புகள் மராட்டியம் – 16,446 இறப்புகள் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள்/கல்லூரிகள்/இதர கல்வி நிறுவனங்களுக்கு அருகில் ஏற்படும் சாலை விபத்துகளால் மொத்த இறப்புகளில் 24.4 சதவீதம் உத்திரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து 9.4 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச உயிரிழப்புகள் உத்தரப்பிரதேசத்தில் (7,212), அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் (5,360) நிகழ்ந்ததாக கூறப்பட்டு உள்ளது. பெருநகரங்களில், சென்னை அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளது( 5,034 பேர்). டெல்லியில் 4,505 வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், டெல்லியில் 1,172 இறப்புகளும், சென்னையில் 998 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.

நாட்டில் உள்ள 53 மெட்ரோ நகரங்களில் பதிவாகி உள்ள 55,400 விபத்துகளில் 2021-ம் ஆண்டில் சென்னை பெருநகர எல்லைக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சென்னை 2-வது இடத்தில் இருந்தது.

கடந்த 2020-ம் ஆண்டில் மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டியபோது 236 பேர் இறந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் இந்த இறப்பு எண்ணிக்கை 15 ஆக குறைந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.

 

related posts