Home கனடா மார்க்கம் பகுதியில் உணவு விஷமான சம்பவம் குறித்து விசாரணை

மார்க்கம் பகுதியில் உணவு விஷமான சம்பவம் குறித்து விசாரணை

by Jey

ஒன்றாடியாவின் மார்க்கம் நகரில் ஹோட்டல் ஒன்றில் உணவு விஷமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் குறித்த ஹோட்டலுக்கு சென்று இருந்த வாடிக்கையாளர்கள் உணவு உட்கொண்டதன் பின்னர் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு உணவு விஷமான தில் ஒரு சிலர் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தனர்.

உணவு விஷமானவை தொடர்பில் முழுமையான விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை கடந்த 27 மற்றும் 28 ஆம் வார இறுதி நாட்களில் குறித்த ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்கள் இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு ஹோட்டல் நிர்வாகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

related posts