கனடாவில் வீடுகளின் விலைகள் 25 வீதம் வரையிலும் குறைவடையும் என அந்நாட்டின் பிரபல வங்கி ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
கனடாவின் ரீடி வாங்கி இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு பகுதியில் இவ்வாறு கனடாவில் வீடுகளின் விலைகள் 20 முதல் 25 வீதம் வரையில் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கனடாவில் அநேகமான பகுதிகளில் வீடுகளின் விடைகள் சராமரி அதிகரிப்பினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் எதிர்வரும் ஆண்டு முதலாம் காலாண்டு பகுதியில் வீடுகளின் விலைகள் கணிசமான அளவில் வீழ்ச்சி அடையும் என ரீடி வங்கி எதிர்வை கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜுலை மாதத்தை விடவும் இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் வீடுகளின் சராசரி விலை ஐந்து விதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.