நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவினால் சபையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே ராஜபக்சவினரின் இல்லத்தை புனரமைக்க நாங்கள் நான்கு ரூபாவைக் கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை புனரமைக்க அரச நிதியில் இருந்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து ஜனாதிபதி முற்றிலுமாக மறுத்துள்ளார்.
நான்கு ரூபாவைக் கூட செலவு செய்ய மாட்டோம்
நாங்கள் ரூ. 400 மில்லியன் அல்லது வெறும் நான்கு ரூபாவை கூட ராஜபக்சவின் இல்லத்தை புனரமைக்க செலவிடப் போவதில்லை.
இருப்பினும் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய விடயங்களை கவனிப்பதற்கு சட்டரீதியாக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.