இன்று முற்பகலளவில் மகிந்த பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் பதவியிலிருந்து விலகியதன் பின் நீண்ட காலத்திற்குப் பின்னர் பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு மகிந்த ராஜபக்ச விஜயம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
இதன்படி, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.