Home இலங்கை வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் தாமரை கோபுரம்

வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் தாமரை கோபுரம்

by Jey

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை கோபுரம் வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஆசியாவின் ஆச்சரியமான மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் தாமரை கோபுரம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்காக சாதாரண கட்டணம் 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கான வரம்பற்ற கட்டணம் 2000 ரூபாயாகும்.

மேலும் வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் நிர்மாணப் பணிகள் முடிவடைந்த நீண்ட காலம் சென்றுள்ள நிலையில், அதனை திறக்கும் நடவடிக்கை தாமதமாகி உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக பல மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts