Home இலங்கை இலங்கை சர்வதேச நிதியத்திடம் அவசர கடனுதவியாக கோரியுள்ள 5 பில்லியன் டாலர்

இலங்கை சர்வதேச நிதியத்திடம் அவசர கடனுதவியாக கோரியுள்ள 5 பில்லியன் டாலர்

by Jey

இலங்கை வந்துள்ள சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அரசுடனான பேச்சுவார்த்தையை இன்று (வியாழக்கிழமை) முடித்து வைத்து, இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கை சர்வதேச நிதியத்திடம் அவசர கடனுதவியாக 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,733 கோடி) கோரியுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24-ந்தேதி முடிவடைந்த நிலையில், சமீபத்தில் 2-ம் கட்டபேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

related posts