Home இந்தியா சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

by Jey

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினையை பரிசீலிக்க சரியான மன்றம் நாடாளுமன்றமே தவிர நீதிமன்றம் அல்ல என கூறி உங்கள் விளம்பரங்களுக்காக நாங்கள் வழக்கை விசாரிக்க முடியாது என மனுதாரரை நீதிபதிகள் காட்டமாக எச்சரித்தனர்.

மேலும் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

related posts