Home இலங்கை சர்வதேச நிறுவனத்தின் பெயரால் வெடித்த போர்கள்

சர்வதேச நிறுவனத்தின் பெயரால் வெடித்த போர்கள்

by Jey

ஐ.நாவை நோக்கிய கோரிக்கைகள் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன. செப்டெம்பர் மாதத்தின் முற்பகுதியில் இடம்பெறவிருக்கின்ற மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஈழத்தமிழ் சமூகம் அளவுக்கதிகமாக நம்புகின்றது. எனவே ஐ.நா என்பது என்ன?

முன்னைய காலங்களில் கடவுளின் பெயரால் அல்லது மதத்தின் பெயரால் தான் பெரும் போர்கள்; நடத்தப்பட்டன.

20ஆம் நூற்றாண்டில், ஐ.நா. சபை என்ற சர்வதேச நிறுவனத்தின் பெயரால் பெரும் போர்கள் நாடுகளுக்கிடையில் வெடித்தன. அவ்வாறான போர்த் தொடர்களில் முதலாவது ‘கொரியாப் போர்’ முக்கியமானது.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஆசியாவில் புதிய போர் முனையை தொடங்கிய சோவியத் செஞ்சேனை கொரியாவை மீட்டு, ஜப்பானைக் கைப்பற்ற திட்டமிட்டது. இதற்குள் முந்திக் கொண்ட அமெரிக்கா, ஜப்பான் மீது அணு குண்டு வீசி தடாலடியாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் பெரும் நாசத்தை விளைவித்த அணு குண்டு தாக்குதலின் மூலம் அமெரிக்கா தன்னை வல்லரசாக அறிவித்துக் கொண்டது. தொடர்ந்து அமெரிக்க இராணுவம் ஜப்பானிலும், கொரியாவிலும் தரையிறங்கியது.

related posts