ஆடம்பர பொருட்களுக்கு வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1ம் திகதி தொடக்கம் கனடாவில் ஆடம்பர பொருட்களுக்கு விசேட வரி அறவீடு செய்யப்பட உள்ளது.
கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த வரி அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செல்வந்த கனேடியர்கள் தங்களது பங்கினை சரியான முறையில் செலுத்துவதனை உறுதி செய்யும் நோக்கில் இந்த வரி அறவீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா பீரிலாண்ட் தெரிவித்துள்ளார்.
ஆடம்பர கார்கள், விமானங்கள், கப்பல்கள் மற்றும் படகுகள் என்பனவற்றின் மீது வரி அறவீடு செய்யப்பட உள்ளது.
எனினும் இந்த நடவடிக்கைக்கு விமான மற்றும் படகு உற்பத்தியாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.