Home கனடா கோவிட் தடுப்பூசி ஏற்றும் நபர் மீது தாக்குதல்

கோவிட் தடுப்பூசி ஏற்றும் நபர் மீது தாக்குதல்

by Jey

கனடாவில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் கிட்ச்னர் பகுதியின் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கோவிட்19 தடுப்பூசி ஏற்றுவதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என மருந்தக உரிமையாளர் ரம்சீ ஷாகர் தெரிவித்துள்ளார்.

மருந்தகத்தை திறக்க முனைந்த போது இவ்வாறு இனந்தெரியாத நபர் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அருகாமையில் இருந்த நபர் ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தம்மை மீட்கும் வரையில் தொடர்ச்சியாக தாம் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்பய்பட்டுள்ளார்.

related posts