Home இந்தியா ஹிந்து மதத்தை எதிர்த்து நடந்து கொள்கிற தி.மு.க

ஹிந்து மதத்தை எதிர்த்து நடந்து கொள்கிற தி.மு.க

by Jey

”தமிழகத்தில் ஹிந்துக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு பெரிதும் காரணம், தி.மு.க., காட்டிய ஹிந்து எதிர்ப்பு உணர்வு தான்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.திருப்பூரில், நேற்று, ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று விசர்ஜனம் செய்யப்பட்டன.

இதன் நிறைவு விழா பொதுக்கூட்டத்துக்கு, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:பல நுாறு ஆண்டுகள் முன் வீரசிவாஜி இதுபோல் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இன்றும் நம் நாட்டில் அது தொடர்கிறது. ஹிந்து என்பதை தனி மதம் என்ற அளவில் மட்டுமில்லாமல், அதை நம் மக்கள் வாழ்வியல் முறையாகத் தான் பார்க்கின்றனர்.

தமிழகத்தில், தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க., மத சார்பற்ற கட்சி, ஆட்சி எனக் கூறிக் கொண்டு, பிற மதங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதோடு, ஹிந்து மதத்தை எதிர்த்தும் நடந்து கொள்கிறது. பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், ஹிந்து மத பண்டிகை என்றால் மட்டும் முரண்டு பிடிக்கிறார்.தமிழகத்தில் மதப்பிரச்னையை ஊக்குவிக்கும் ஆட்சியாக தி.மு.க., உள்ளது.

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்துகின்றனர். பிரிவினைவாதம் பேசுகின்றனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் நடத்திய கூட்டாட்சியின் நடவடிக்கையை மக்கள் கண்டுள்ளனர்.

தற்போது நடக்கும் ஒரு கட்சியின் ஆட்சியையும் அவர்கள் பார்த்து வருகின்றனர். அந்த வேறுபாடு நன்றாகத் தெரியும்.ஹிந்து மக்கள் மத்தியில் இன்று ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க., காட்டும் ஹிந்து எதிர்ப்பு தான் என்று கூறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

 

 

related posts