கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் இடம்பெற்ற கத்தி குத்துத் தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜேம்ஸ் க்ரீ நேஷன் மற்றும் வெல்டொன் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை அண்டிய 13 இடங்களில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
31 வயதான டேமியன் சன்டர்சன் மற்றும் 30 வயதான மயில்ஸ் சன்டர்சன் ஆகியோரே இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக ஜேம்ஸ் க்ரீ நேஷனில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டது.
சிலரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் இதன் போது ஏனையவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.