2021-ம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து 20 லட்சத்திற்கும் கூடுதலான குழந்தைகளின் ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன என மெட்டா (பேஸ்புக்) மற்றும் மூத்த போலீசார் சமீபத்தில் தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் ஆபாச படம் எடுத்தல், சிறுமிகளை கடத்துதல் உள்ளிட்ட கும்பல் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
குழந்தைகள் உரிமைகள் நல குழுக்கள் தொடர்ந்து இந்த குற்றங்களுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகின்றன.
ஆனால், போலீசாரோ அல்லது அரசியல் கட்சிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
2021-ம் ஆண்டில் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் கசூர் மாவட்டத்தில் கும்பல்களின் குழந்தை கடத்தல் சம்பவங்கள் 298 என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, ராவல்பிண்டி (292) மற்றும் இஸ்லாமாபாத் (247) நகரங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.