கனடாவில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சில முன்னணி நிறுவனங்கள் விலைக் கழிவுகளை அறிவித்துள்ளன.
வாடிக்கையாளர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டமை குறித்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் இலவச பொருட்கள் மற்றும் விலைக் கழிவுகள் வழங்கப்படும் என அறிவித்தல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
காப்புறுதி நிறுவனங்கள், உணவு விற்பனை நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இவ்வாறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இவ்வாறு சலுகைகள் விலைக் கழிவுகள் வழங்கப்படுவதன் மூலம் மக்கள் அதிகளவில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் நாட்டம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.