சஸ்கட்ச்வான் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
31 வயதான டேமியன் சன்டர்சன் என்ற நபர் சம்பவத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மயில்ஸ் சன்டர்சனை இதுவரையில் கைது செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் குறித்த நபருக்கு தொடர்ந்தும் வலை வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 15 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.