கனேடிய மத்திய வங்கி வட்டி வீதங்கள் இன்றைய தினம் உயர்த்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் ஏற்கனவே நான்கு தடவைகள் வங்கி வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கி வட்டி வீத உயர்வானது கொடுகடன் வட்டி வீதங்களில் தாக்கத்தை செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உலகின் அநேக மத்திய வங்கிகள் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜுலை மாதம் ஆண்டு பணவீக்க வீதம் 7.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.