சஸ்கட்ச்வான் சந்தேக நபரை தேடி பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சஸ்கட்ச்வானின் ஜேம்ஸ் க்ரீ நேஷன் மற்றும் வெல்டொன் ஆகிய பகுதிகளில் இட்மபெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
டேமியன் சன்டர்சன் மற்றும் மயில்ஸ் சன்டர்சன் ஆகிய சகோதரர்களே இவ்வாறு சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடுர்புடைய டேமியன் சன்டர்சன் சடலமாக மீட்கப்பட்ட போதிலும் மயில்ஸ் சன்டர்சன் தலைமறைவாகியுள்ளார்.
பொலிஸார் தொடர்ச்சியாக நான்காவது நாளாக மயில்ஸ் சன்டர்சனை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.