கனடாவில் அல்சீமர் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2050ம் ஆண்டளவில் இவ்வாறு நோயளர் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
2020ம் ஆண்டில் கனடாவில் மொத்தமாக 597000 பேர் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கை எதிர்வரும் 2050ம் ஆண்டில் 1.7 மில்லியனாக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடாவில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் சுமார் 7 மில்லியன் பேர் 65 வயது அல்லது அதனையும் விட கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.