சஸ்கட்ச்வான் படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்ய பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கனடிய போலீசார் குறித்த நபரை இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேம்ஸ் க்ரீ பகுதியில் இடம்பெற்ற பாரிய கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சகோதரர்களான டேமியன் சாண்டர்சன் மற்றும் மயில் சாண்டர்சன் ஆகியோர் தற்பொழுது உயிரிழந்து விட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான டேமியன் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நான்கு நாட்களாக தலைமறைவாக இருந்த மைல்ஸ் இன்றைய தினம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததன் பின்னர் உடல் உபாதை காரணமாக உயிரிழந்து உள்ளார்.
எவ்வாறான நோயினால் குறித்த நபர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது பற்றியோ மரணத்திற்கான சரியான காரணங்கள் பற்றியோ இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது