ஒன்றாரியோ மாகாணத்தில் கட்டணம் செலுத்தாது பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் கோ ட்ரான்சிட் சேவை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் டிக்கட் எடுக்காது பயணம் செய்வதனால் பாரியளவு நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவிர்க்கும் நோக்கில் கட்டணம் செலுத்தாது செல்லும் பயணிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
முன்னதாக கட்டணம் செலுத்தாது பயணிப்போருக்கு 100 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் தவறிழைக்கும் ஒவ்வொரு தடவைக்கும் இந்த கட்டணத் தொகை உயர்த்தப்படும் எனவும் 5000 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.