கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில், மழையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்படி, கோடி மடத்தின் மடாதிபதி ஆரூடம் கணித்துள்ளார்.
ஹாசன், அரசிகரேவின், கோடி மடத்தின் சிவானந்த சுவாமிகள், நேற்று மாண்டியாவில் கூறியதாவது:மாநிலத்தில் மழை அசம்பாவிதங்கள் நீடிக்கும்.
நாடு முழுதும் ‘ஜல பிரளயம்’ ஏற்படும். சுனாமி வரும் அபாயமும் உள்ளது. பூமியில் புதுப்புது விஷ ஜந்துகள் உருவாகும்.
மக்கள் வீட்டிலிருந்து வெளியே புறப்படும் போது, மண் வெட்டியை பிடித்து செல்லும் காலம் வரும்.தற்போது உள்ளதை விட, அதிகமான கஷ்ட காலம் ஏற்படும்.
இதற்கு கடவுளை பூஜிப்பது மட்டுமே, ஒரே பரிகாரம். சாதுக்கள், சன்னியாசிகள் உள்ளனர். அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்தால், உலகம் பிழைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை, பயனாளிகளிடம் வழங்க உள்ளார்
முதல்வர் ஸ்டாலின் வரும் 14ம் திகதி திண்டுக்கல் மாவட்டம் செல்கிறார். அங்கு, தோட்டநுாத்து என்ற இடத்தில், இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை, பயனாளிகளிடம் வழங்க உள்ளார். அன்று இரவு மதுரையில் தங்குகிறார்.
தென் மாவட்டங்களுக்குச் சென்று நேற்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், அடுத்த வாரம் மூன்று நாட்கள், மீண்டும் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
மறுநாள் காலை அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, மதுரை சிம்மக்கல் அருகே நெல்பேட்டையில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதன் அருகில் உள்ள துவக்கப் பள்ளியில், ‘முதல்வரின் காலை உணவு’ திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் விருதுநகர் செல்கிறார். அங்கு 70 கோடி ரூபாயில், கலெக்டர் அலுவலக வளாக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார். மாலையில், தி.மு.க., சார்பில் நடக்கும் முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்.
மறுநாள் மீண்டும் மதுரை செல்லும் முதல்வர், அங்கு தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று, அவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.