கனடாவின் அரச தலைவராக மன்னர் சார்ள்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் கனடாவின் புதிய அரச தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான நிகழ்வு ஒன்றும் நடைபெற்றுள்ளது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஆளுனர் நாயகம் மேரி சிமோன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
அண்மையில் பிரித்தானிய மகாராணி காலமானதைத் தொடர்ந்து அவரது புதல்வர் மன்னர் சார்ள்ஸ் கனடாவின் அரச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராணி எலிசபெத்தின் மறைவினை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.