நோர்த் யோர்க்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான்.
ஷால்டொன் சாமுடா என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.
சனிக்கிழமை அதிகாலை வேளையில்இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவன் வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.