Home இந்தியா கேரளாவில் பயனற்றதாக மாறி வருகிற தடுப்பூசிகள்

கேரளாவில் பயனற்றதாக மாறி வருகிற தடுப்பூசிகள்

by Jey

கேரளா மாநிலம் அரை கிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த போது, திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று, சிறுவனை கடித்து குதறியது.

சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெரு நாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறுவனை கடித்த நாய் அதே நாளில் அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை கடித்ததாக கூறப்படும் நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசின் தகவல் படி 2022ல் இதுவரை கேரளாவில் 21 பேர் வெறிநாய்க்கடியால் இறந்துள்ளனர். அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்.

கேரளாவில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறி வருகிறது. இது குறித்து சமீபகாலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதை தொடர்ந்து மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ், மாநிலத்தில் கிடைக்கும் ரேபிஸ் தடுப்பூசியின் தரத்தை பரிசோதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேட்டுக் கொண்டார்.

related posts