Home இலங்கை இலங்கை மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி

இலங்கை மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி

by Jey

இலங்கை மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவ பிரித்தானியா அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் மிச்சேல் டெய்லர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது, இலங்கை எதிர்நோக்கியுள்ள ஆழமான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சவால்களை தாங்கள் அடையாளம் காணும் அதேவேளை மறுசீரமைப்புக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடனும், இலங்கைக்குள் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேற்கொள்ளும் முயற்சிகளை மிகவும் வரவேற்கின்றோம்.

மேலும் அமைதியான ஒன்று கூடல், பேச்சுரிமை உட்பட மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்.

சட்டத்தின் இறையாண்மை, நீதிக்கான சம வாய்ப்புகள், சுதந்திரமான நிறுவனங்கள், வெளிப்படைத்தன்மை என்பன பொறுப்புக்கூறும் ஜனநாயக கட்டமைப்புகளின் தூண்கள்.

அதுமட்டுமன்றி சட்ட இறையாண்மைக்கு உட்பட்டு எதிர்ப்புகள் அதனுடன் சம்பந்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமத்துவத்தை வழங்க வேண்டும்.

நீதியான வழக்கு விசாரணைகளின் உறுதிப்பாடு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட சட்ட பாதுகாப்புகளை பாதுகாப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டமானது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருப்பது அத்தியவசியம்.

முன்னேறிய மனித உரிமைகளுக்காக பிரதான நடவடிக்கையாக இலங்கைக்குள் நீண்டகாலமாக இருந்து வரும் தண்டனைகளில் தப்பிப்பது மற்றும் ஊழலுக்கு தீர்வு காண்பது முக்கியமானது.

நாங்கள் இலங்கையின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம்” எனவும் மிச்சேல் டெய்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

related posts