ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கண்டு முழு உலகமும் அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச அமைப்புகளின் நோக்கங்களை தோற்கடிக்க வேண்டுமாயின் நாங்கள் இலங்கையர்களாக அமர வேண்டும்.
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அந்தந்த நாடுகளுக்காக நிற்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.