சஸ்காடூனில் முகக் கவச பயன்பாட்டுக்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுமார் நூறு பேர் வரையில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் மெக்ஸிம் பெரினரும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தார் என்பதுடன் ஏனைய போராட்டக்காரர்களுடன் கைலாகு செய்துள்ளர்ர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகக் கவச பயன்பாட்டுக்கு எதிராக ஏற்கனவே போராட்டங்களை நடத்திய சிலரும் இந்தப் போராட்டத்தில் எச்சரிக்கையை மீறி பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தில் திறந்த வெளியில் 10 பேருக்கு மேல் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.