Home இந்தியா மு.க.ஸ்டாலினை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து

மு.க.ஸ்டாலினை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து

by Jey

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அந்த வகையில் சங்கத்தின் தலைவரான திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ், செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பாக்கியராஜ் அளித்த பேட்டி வருமாறு:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் எழுத்தினால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. நான் தனிப்பட்ட முறையில் கருணாநிதியின் எழுத்தை அதிகம் ரசிப்பவன். என்னுடைய எழுத்தை அதிகம் மதித்தவர் கருணாநிதி.

அவருடனான நட்பு நீண்ட காலமாக இருந்தது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய இரண்டு பேரின் நிகழ்வுகளிலும் சரிசமமாக பங்கேற்றவன் நான். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கருணாநிதியாகும்.

நீங்கள் கூறியபடி, சமீப காலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர். வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர். தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான்.

தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும், இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. சங்க தேர்தலில் உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

related posts