வாகனக் கடத்தலில் ஈடுபட்டதாக 16 வயதான சிறுவன் ஒருவன் மீது றொரன்டோ பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த வார இறுதியில் இந்த சிறுவனும் மேலும் மூன்று பேரும் கார் ஒன்றை கடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்காப்ரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தி முனையில் இவ்வாறு வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.