Home உலகம் தங்களது ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்களது கூந்தலை வெட்டியும் போராட்டம்

தங்களது ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்களது கூந்தலை வெட்டியும் போராட்டம்

by Jey

ஈரானில் 22 வயது இளம்பெண், சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி அந்நாட்டு போலீசார் அடித்து கைது செய்தனர். போலீசாரின் தாக்குதலில் அப்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்களது கூந்தலை வெட்டியும் போராட்டம் நடத்தினர்.

இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது.

இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை போலீஸ் பிரிவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் அவர்களது குடும்பத்தினரை நெறிமுறை போலீசார் இடைமறித்துள்ளனர்.

அப்போது, மாஷா அமினி, தனது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர்.

கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் இறங்கினர்.
ஹிஜாப்பால் ஒருபெண் உயிரிழந்ததை அடுத்து, தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு கொளுத்தினர். மேலும், தங்களது கூந்தலையும் வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் பெருமளவு ஹிஜாப்பை எறித்து போராட்டத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் 22 வயது இளம்பெண், சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி அந்நாட்டு போலீசார் அடித்து கைது செய்தனர். போலீசாரின் தாக்குதலில் அப்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்களது கூந்தலை வெட்டியும் போராட்டம் நடத்தினர்.

இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது.

இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை போலீஸ் பிரிவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் அவர்களது குடும்பத்தினரை நெறிமுறை போலீசார் இடைமறித்துள்ளனர். அப்போது, மாஷா அமினி, தனது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர்.

கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் இறங்கினர்.

ஹிஜாப்பால் ஒருபெண் உயிரிழந்ததை அடுத்து, தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு கொளுத்தினர். மேலும், தங்களது கூந்தலையும் வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் பெருமளவு ஹிஜாப்பை எறித்து போராட்டத்தில் இறங்கியது பரபரப்பை

related posts