கியூபக் மாகாணத்தின் ஒன்றியலில் வசிக்கும் 18 வயது இளைஞர் ஒருவர் உலக இளைஞர் சதுரங்க போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சாவான் ரொட்டிகோ லிமினிக்ஸ் என்ற இளைஞரை இவ்வாறு சர்வதேச இளைஞர் சதுரங்கப் போட்டியில் கனடாவிற்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
54 நாடுகளைச் சேர்ந்த 18 வயதிற்கும் குறைந்த போட்டியாளர்களை வென்று இந்த சாதனையை படைத்துள்ளார்.
கடந்த வாரம் இந்த சாம்பியன்ஷிப் போட்டி ரொமானியாவில் நடைபெற்றது என தெரிவித்துள்ளார்.
உலக இளைஞர் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது கனடியர் இவர் என்பதுடன் முதல் தடவையாக கியூபிக் மாகாணத்தில் இவ்வாறான பட்டம் ஒன்று வென்றெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றெடுக்க கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் இறுதிப் போட்டி வரை முன்னேற கூடிய சாத்தியம் இருப்பதாக கருதவில்லை எனவும் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.