பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிரீசின் தேஸ்பினா பாபாமிக்கேலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றவருமான ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 3-6, 2-6 என்ற நேர்செட்டில் 36-வது இடத்தில் உள்ள கின்வென் செங்கிடம் (சீனா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
19 வயதான கின்வென் செங், ‘டாப்-10’ இடத்துக்குள் இருக்கும் ஒரு வீராங்கனையை சாய்த்தது இதுவே முதல்முறையாகும். தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரங்கனை கரோலின் கார்சியா 6-4, 6-7 (5-7), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் 28-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சூவாய் ஜாங்கிடம் போராடி வீழ்ந்தார்.