அணு ஆயுத பயன்பாடு குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூட்டின் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் கனடிய அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் டுடே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள பிரதமர் ட்ரூடோ இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள படை எடுப்புகளை முறியடிப்பதற்கு கனடா உக்கிரேனுக்கு பூரண ஆதரவினை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி பொறுப்புணர்ச்சி அற்ற ஆபத்தான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தோல்வி அடைந்ததன் வெளிப்பாடாகவே புட்டின் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.