புயல் காற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவ உதவி வழங்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் டுடே தெரிவித்துள்ளார்.
அட்லாண்டிக் கனடா பகுதியை பியோனா புயல் காற்று தாக்கியது புயல் காற்றினால் அனேக பகுதிகளுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை திரட்டி வருவதாக சமஸ்டி அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12 மணித்தியாலங்களாக அட்லாண்டிக் கனடிய மக்கள் புயல் காற்று தாக்கத்தினாலும் கடுமையான மழை தாக்கத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக பிரதமர் டுடேவின் ஜப்பான் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் மணிக்கு 141 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் சுமார் 200 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது.