Home உலகம் ஆர்டிமிஸ் 1 விண்கலம் இன்றிரவு பாதுகாப்பான கட்டிடத்தில்

ஆர்டிமிஸ் 1 விண்கலம் இன்றிரவு பாதுகாப்பான கட்டிடத்தில்

by Jey

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆர்டெமிஸ் 1 என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இதன்படி, விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. இந்த ஆர்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும். கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது.

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது.

ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40-வது நிமிடத்தின்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி விவாதித்தனர்.

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் செப்டம்பர் 3-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. சூறாவளி புயல், எரிபொருள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை 3 முறை இந்த பயண திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆற்றல் வாய்ந்த ஐயான் என்ற சூறாவளி தாக்க உள்ளது என தகவல் வெளியானது. இது இந்த விண்கலம் செலுத்த கூடிய பகுதியை கடந்து செல்ல கூடும் என்றும் கூறப்பட்டது. இதுபற்றி நாசா அமைப்பின் அதிகாரி ஜிம் ப்ரீ வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், ஐயான் சூறாவளி பற்றிய வானிலை அறிவிப்பின் தொடர்ச்சியாக, ஆர்டிமிஸ் 1 விண்கலம் இன்றிரவு பாதுகாப்பான கட்டிடத்தில் வைக்கப்படும்

related posts