Home கனடா ஒன்றாரியோவில் தீபாவளி கொண்டாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஒன்றாரியோவில் தீபாவளி கொண்டாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

by Jey

தீபாவளி தினமன்று உள்ளூர் ஆட்சி தேர்தல் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் தீபாவளி தினமன்று உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது.

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நிகரான ஓர் பண்டிகையாக தெற்கு ஆசிய மக்கள் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் தீபாவளி தினமன்று தேர்தல் நடத்தப்படுவது குறித்து தெற்கு ஆசிய சமூகங்களை சேர்ந்தவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் தினத்தை மாற்றுமாறும் பல்வேறு வழிகளில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறெனினும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மாகாண சபை சட்டத்தின் கீழ் நடத்தப்படுவதாகவும் இதனால் தேர்தல் தினத்தை மாற்றுவது சாத்தியம் இல்லை எனவும் அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

முன்கூட்டியே தேர்தல்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் வழியாகவும் முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள் அல்லது பிராக்சிகள் மூலமும் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி தினம் அன்று இவ்வாறு தேர்தலை நடத்துவதனால் அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவத்தில் தாக்கம் ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts