பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவரது கட்சியுடன் கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் அவர் பேசுகிற உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவுகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் கசிந்து அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தின.
இதேபோன்று, மற்றொரு ஆடியோ ஒன்றும் கசிந்துள்ளது. இந்த பதிவில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவரான மரியம் நவாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் பேசுகிறார்.
அதில், சுகாதார காப்பீடு அட்டை வழங்கும் சேவையை நிறுத்தும்படி, பிரதமரிடம் மரியம் கூறுகிறார். ஏனெனில் அதனால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது என அதற்கான காரணங்களையும் அவர் கூறுகிறார்.
இந்த இலவச சேவையானது, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் முந்தின ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சேவையை பெற்று வந்தனர்.