இட்டாபிகாக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிக்சன் மற்றும் ஸ்கைவே வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
வாகனத்தில் மோதுண்ட மோட்டார் சைக்கிள் ஒட்டி மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்திருந்தார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்திருந்த நிலையில் குறித்த நபருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டதாகவும் எனினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.