கனடாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி பொருளியல் ஆய்வாளரும் பிரபல நிறுவனம் ஒன்றின் பொருளியல் துறை தலைமை அதிகாரிமான டேவிட் டாயில் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடா இதுவரையில் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் காலங்களில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறிப்பாக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் கனடாவில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியானது மூன்று வீத வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் வேலையில்லாதோர் வீதம் ஐந்து வீதமாக உயரும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத பிரச்சனை என்பன பொருளாதார நெருக்கடி நிலையை உக்கிரப்படுத்தும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த ஆண்டில் கனடாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்க நிலைமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் போது நாடுகளில் வீட்டுச் சந்தை பலவீன அனுமதியும் எனவும் கனடாவில் அபராத ஒரு நிலைமையை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.