கனடாவின் ஆறு மாகாணங்களில் சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.
ஒன்றாறியோ, சஸ்கட்ச்வான், மானிட்டோபா, நோவா ஸ்கோட்டியா நியூ பிரான்ஸ்விக் மற்றும் நியூ பவுன் லேண்ட் ஆகிய பகுதிகளில் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பளம் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தொடர்ச்சியாக பணவீக்கம் அதிகரித்து செல்லும் நிலையில் இந்த சம்பள அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மணித்தியாலம் ஒன்றுக்கான சம்பளம் 15 டாலர்களாக குறைந்தபட்சம் பேணப்பட வேண்டும் என கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
சில மாகாணங்களில் இந்த அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது நீண்ட காலமாக சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை எனவும் சம்பளங்கள் உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்