Home கனடா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 300 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு

புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 300 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு

by Jey

அண்மையில் அட்லாண்டிக் கனடா பகுதியில் பியோனா புயல் தாக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த புயல் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை புணரமைப்பதற்காக மத்திய அரசாங்கம் 300 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 2 ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக உதவிகள் வழங்கப்படும் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு தங்களது வாழ்க்கையை கட்டி எழுப்புவதற்காக இவ்வாறு உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காப்புறுதி அல்லது வேறு ஏதேனும் உதவிகள் கிடைக்கப் பெறாத மக்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசாங்கம் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

வீடுகள் கட்டடங்கள் உட்கட்டுமான வசதிகள் என்பவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கருத்தில் கொண்டு அவற்றை புணரமைப்பதற்காக இவ்வாறு நிதி உதவிகளை வழங்குவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக மாகாண அரசாங்கங்களுக்கும் நிதி உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

related posts