Home கனடா கனடாவில் பெட்ரோல் விலை உயரும்

கனடாவில் பெட்ரோல் விலை உயரும்

by Jey

கனடாவில் பெட்ரோலின் விலை மேலும் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நன்றி கூறல் விடுமுறை நாள் உள்ளிட்ட நீண்ட  இறுதி விடுமுறை நாட்களில் இவ்வாறு எரிபொருளின் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளின் அமைப்பான ஒபெக் அமைப்பு எடுத்துள்ள தீர்மானத்தினால் கனடாவிலும் எரிபொருட்களின் விலை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ச்சியாக குறைவடைந்து செல்லும் காரணத்தினால் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு ஒபெக் நாடுகள் தீர்மானித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 100 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது எனினும் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 84 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒபெக் நாடுகள் உற்பத்தியை மட்டுப்படுத்த எடுத்துள்ள தீர்மானம் கனடாவில் எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts