கனடாவின் பிரின்ஸ் ஒப் எட்வர்ட்ஸ் தீவுகள் மற்றும் நோவா ஸ்கூட்டியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16,000 வாடிக்கையாளர்கள் மின்சார வசதியின்றி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் இவ்வாறு மின்சார இணைப்பு இன்றி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அட்லாண்டிக் கனடா பகுதியை தாக்கிய பியோனா பெரும் புயல் காரணமாக இவ்வாறு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு நோவாஸ் கோட்டியா அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது.
மின்சார இணைப்பு தடைபட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அசவுகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.