Home உலகம் 4 சளி மருந்துகள் காரணமாக காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழப்பு

4 சளி மருந்துகள் காரணமாக காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழப்பு

by Jey

ஹரியானாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த 4 சளி மருந்துகள் காரணமாக காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை தொடர்பாக, இந்தியா விசாரணை நடத்தி வருகிறது.

ஹரியானாவின் சோனிபட் பகுதியில் செயல்படும் மெய்டன் என்ற மருந்து கம்பெனி, புரோமெதாஜின் ஓரல் சொல்யுசன், கோபெக்மலின் குழந்தை சளி மருந்து, மேக் ஆப் பேபி குழந்தை சளி மருந்து மற்றும் மக்ரிப் சளி மருந்து ஆகியவற்றை தயாரித்துள்ளது. இந்த மருந்து பெரும்பாலும் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள காம்பியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்கா நாட்டிற்கும், உகளவிற்கும் ஏற்றுமதி செய்ப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

காம்பியா நாட்டில், உடல்நலக்குறைவால் 66 குழந்தைகள் இறந்தனர். இதற்கு, ஹரியானாவில் தயாரான சளி மருந்துகள் காரணமாக இருக்கலாம் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், இந்த மருந்தை தயாரித்தவர்கள், அதன் பாதுகாப்பு குறித்து எந்தவிதமான உறுதிமொழியையும் அளிக்கவில்லை. அந்த மருந்தில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அதிகளவு டெத்லின் கிளைகோல் மற்றும் எத்திலின் கிளைக்கோல் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவை, மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், உயிரிழப்பை ஏற்படுத்தும். இவை பயன்படுத்தப்படுவதால், வயிற்று வலி, வாந்தி, டயரியா, சிறுநீர் கழிக்க முடியாத சூழல், தலைவரி, மனநிலை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் ஆத்னோம் கூறுகையில், இந்த சளி மருந்துகள் காரணமாக, சிறுநீரக செயலிழப்பு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: சளி மருந்துகள் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) புகார் தெரிவித்தது. டிசிஜிஐ அமைப்பு உடனடியாக இதனை விசாரணையை துவக்கிவிட்டது எனக்கூறியுள்ளது.

 

 

 

 

 

 

 

related posts