கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பணி நியமன பட்டியலை கவர்னர் ஆரிப் முகமது கான் திருப்பி அனுப்பியுள்ளார்.
தகுதியில்லாதவர்களை மாற்ற வேண்டும் என அறிவுறுத்திய அவர், பட்டியலை சரி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கேரள முதல்வரின் தனிச் செயலாளர் கே.கே.ராகேஷின் மனைவி பிரியா வர்கீசை கண்ணூர் பல்கலைக்கழக இணைப் பேராசிரியையாக நியமிக்க கவர்னர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
அவரது நியமனம், விதிகளை மீறியதாகக் கூறி, கவர்னர் அந்த நியமனத்துக்குத் தடை விதித்தார். இந்நிலையில், கேரள அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.