Home கனடா கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆளில்லா விநியோக வண்டி

கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆளில்லா விநியோக வண்டி

by Jey

கனடாவின் றொரன்டோவில் ஆளில்லா மளிகைப் பொருள் விநியோக வண்டிச் சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

றொரன்டோ பெரும்பாக பகுதியில் ஆளில்லா இந்த மளிகைப் பொருள் வாகனம் சேவையை ஆரம்பித்துள்ளது.

Loblaw Cos என்ற நிறுவனம் குறித்த சேவையை ஆரம்பித்துள்ளது. சாரதியின்றி இயங்கும் வண்டியொன்றின் மூலம் றொரன்டோவின் பல பகுதிகளுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது.

கனடாவில் இந்த தொழில்நுட்பம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இலகுவில் மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு இந்த புதிய சேவையை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த விநியோக சேவை பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 150000 தடவைகள் தானியங்கு அடிப்படையில் மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்பய்பட்டுள்ளதாகவும், 100 வீத துல்லியத்தன்மை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது சாரதியொருவர், வாகன  சாரதி இருக்கையில் அமர்ந்திருந்தாலும், தானியங்கு அடிப்படையில் வாகனம் செலுத்தப்பட்டது.

 

related posts