ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராசென்கா தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மாகாண பிரதான பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் டேவிட் வில்லியம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசி பயன்படுத்துவதனால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து இந்த தடுப்பூசியின் முதல் மருந்தளவு ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், மாகாணத்தில் இதுவரையில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டதன் பின்னர் இரத்தம் உறைதல் ஏற்பட்ட 8 பேர் வரையிலேயே பதிவாகியுள்ளதாகவும் இது அரிதானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.